பொதுக்கூட்டங்கள், பரப்புரைகள் நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிடுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் & சட்டமன்றம்/நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள கட்சிகளின் ஆலோசனைக் கூட்டமானது தலைமைச் செயலகத்தில்,
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்களின் தலைமையில்,
மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் திரு.எஸ். ரகுபதி மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் ஆகியோரின் முன்னிலையில் இன்று (06-11-2025) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நமது தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மக்கள் நீதி மய்யம் சார்பாக துணைத்தலைவர் திரு. A.G.மௌரியா IPS (ஓய்வு) மற்றும் தலைமை நிலைய மாநிலச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டு கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/1986404111827542382?s=20
Facebook: https://www.facebook.com/share/p/1AVQVG4WMG/
Instagram: https://www.instagram.com/p/DQttvP0CVQy/?utm_source=ig_web_copy_link&igsh=a3hqZnp6ZHU3cmY0