கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.

22 செப்டம்பர், 2023
 
S

இன்று 22.09.2023 கோவையில் நடைபெற்ற "கோவை மண்டல நிர்வாகிகள்" கூட்டத்தில் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விரிவாக உரையாற்றி கட்சி நிர்வாகிகளுக்கு அடுத்தகட்ட செயல்திட்டங்களை எடுத்துரைத்தார்.

கடந்த தேர்தல்களில் நாம் பெற்ற அனுபவங்களின் துணையோடு நாடாளுமன்றத் தேர்தலை சிறப்பாக எதிர்கொள்வோம் என்று சூளுரைத்த தலைவர் அவர்கள் உடனடியாக பூத்கமிட்டி அமைக்கும் பணிகளை நிறைவு செய்ய நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் திரு.ஆ.அருணாச்சலம் அவர்கள் முன்னிலை வகித்தார். கோவை மண்டல நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்ட இக்கூட்டத்தில் துணைத்தலைவர் திரு.R.தங்கவேலு அவர்கள் வரவேற்புரையாற்றினார், துணைத்தலைவர் திரு.A.G.மௌரியா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக கோவை மண்டல செயலாளர் திரு.ஆ.ரங்கநாதன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

கூட்டத்தில் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1705199011664445687?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid036W1NTSpwESBeoSSDNsN8axiwkv7Ab1FXPTBdSmGx9nzM4G6UJ1J4DcV1zyJHXr1Bl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CxfpDAfvp-3/?igshid=MmU2YjMzNjRlOQ==

சமீபத்திய காணொளி







Share this post