கோவை, கவுண்டம்பாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய அலுவலகத் திறப்பு விழா!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலுடன், கவுண்டம்பாளையம் மநீம மாவட்டச் செயலாளர் திரு. மனோகரன் தலைமையில், கட்சியின் துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்கள் கட்சியின் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்து, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகளிடையே உரையாற்றிய துணைத் தலைவர் அவர்கள், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள், பூத் கமிட்டி அமைத்தல், கட்சியின் கட்டமைப்பை விரிவுபடுத்தல், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு, மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள், செயல்பாடுகளை பொதுமக்களிடம் கொண்டுசேர்த்தல் உள்ளிட்டவை குறித்து கலந்தாலோசித்தார்.
இந்நிகழ்வில், கட்சியின் நற்பணி அணி மண்டல அமைப்பாளர் திரு. சித்திக், சமூக ஊடக அணி மண்டல அமைப்பாளர் திரு. தாஜூதீன், ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு அணி மண்டல அமைப்பாளர் திரு. செவ்வேள், மாவட்டச் செயலாளர்கள் திரு. மோகன்ராஜ், திரு. மயில்கணேஷ், மாவட்டப் பொருளாளர் திரு. சிராஜுதீன், மற்றும் நிர்வாகிகள் திரு. சத்தியநாராயணன், திரு. கார்த்தி, திரு. ஜெய்கணேஷ், திரு. வேல்முருகன், திரு. ரசூல்கான், திருமதி. லட்சுமி, திரு. சிக்கந்தர், திரு. விக்டர், திருமதி. விஜயா, திருமதி. பனித்துளி, திரு. ராதாகிருஷ்ணன், திரு. நித்தியானந்தம், திரு. பிரசன்னா உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1940009535806349832?t=TljynUyc4XtuLKRET-KjGQ&s=19
Facebook: https://www.facebook.com/share/p/15tCn6nucV/
Instagram: https://www.instagram.com/p/DLkD__6vSr6/?img_index=3&igsh=d3A0N3JscDhyMXAy