மன்மோகன்சிங், EVKS.இளங்கோவன் படத் திறப்பு விழாவில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பங்கேற்பு.

7 ஜனவரி, 2025

மன்மோகன்சிங், EVKS.இளங்கோவன் படத் திறப்பு விழாவில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பங்கேற்பு.

அண்மையில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் EVKS.இளங்கோவன் ஆகியோரது படத் திறப்பு விழா சென்னை காமராஜர் அரங்கில் இன்று (ஜன. 7) நடைபெற்றது. தமிழக முதல்வர் மாண்புமிகு @mkstalin அவர்கள், இருவரது படங்களையும் திறந்துவைத்தார்.

இவ்விழாவில் காங்கிரஸ் கட்சி அழைப்பின் பேரில், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. @ikamalhaasan அவர்களது உத்தரவுப்படி, ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு மாநிலச் செயலாளர் திரு. முரளி அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டார். உடன் கட்சியின் தலைமை நிலைய மாநிலச் செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம், மாணவர் அணி மாநிலச் செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன், சமூக ஊடக அணி மாநிலச் செயலாளர் திரு. லஷ்மண், மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி. சினேகா மோகன்தாஸ் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1876593718360465861

Facebook: https://www.facebook.com/share/p/12DPVB4ojx2/

Instagram: https://www.instagram.com/p/DEhd4bHJKZW/?utm_source=ig_web_copy_link

சமீபத்திய காணொளி







Share this post