அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்க சட்டத்தைக் கொண்டுவந்த, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்பு.
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) காந்தியடிகளின் பெயரை நீக்கி சட்டமியற்றியுள்ள ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் சென்னை மேடவாக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (டிச. 24) நடைபெற்றது.
இதில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் Kamal Haasan அவர்களது வழிகாட்டுதலின்படி, கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் Arunachalam அவர்கள் பங்கேற்றுப் பேசினார்.
அவர் பேசும்போது,
"தற்சார்பும் தன்னிறைவும் கொண்ட கிராம ராஜ்யத்தைக் கனவு கண்டவர் காந்தி. அதற்கான அடித்தளத்தை உருவாக்குவதே தேசிய வேலை உறுதித் திட்டத்தின் நோக்கம். ஒன்றிய அரசின் தற்போதைய சட்டம் காந்தியின் கனவைச் சிதைத்து, 100 நாள் வேலை உறுதித் திட்டத்தையே முடக்குவதாக அமைந்துவிடும் என எச்சரித்தார்.
மேலும் தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்களால் இரயில் பெட்டியிலிருந்து தூக்கியெறியப்பட்டார் அண்ணல் காந்தியடிகள். விளைவு: வெள்ளையர்கள் சாம்ராஜ்யத்தை இந்தியாவிலிருந்து துடைத்தெரிந்தார்.
அதேபோல இன்று 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் பெயரிலிருந்து அண்ணல் காந்தியடிகளின் பெயர், ஒன்றிய பாஜக அரசால் தூக்கியெறியப்படுகிறது. இதன் விளைவு கோடான கோடி இந்திய மக்களின் உள்ளங்களில் வாழும் காந்தியடிகள், பாஜக கனவு காணும் சாம்ராஜ்ஜியத்தை தகர்த்தெரிவார்கள். அதற்காகத்தான் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது." என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் அவர்களின் தலைமையில், கட்சியின் மாநிலச் செயலாளர்கள் திரு. வைத்தீஸ்வரன், திருமதி. சினேகா மோகன்தாஸ், திரு. ராகேஷ் ராஜசேகரன், திரு. லக்ஷ்மன், திரு. அரவிந்ராஜ், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன், மாவட்டச் செயலாளர்கள் திரு. சைதை ஜெ.கதிர், திரு. உதயகுமார், திரு. தனபாலன், திரு. மாறன், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில துணை அமைப்பாளர் திரு. மாடசாமி, திரு. யுவராஜ் ஆகியோருடன் மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்று, ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர்...
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/i/status/2003824264504660370
Facebook: https://www.facebook.com/share/p/178y7p5uX6/
Instagram: https://www.instagram.com/p/DSpfee5iRWW/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==