எண்ணூர் எண்ணெய்க் கசிவு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன்.

17 டிசம்பர், 2023

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் எண்ணெய்க் கசிவினால் பெரும் பாதிப்பிற்குள்ளான எண்ணூர் பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

பத்திரிகையாளர்கள், எண்ணூர் பகுதி மீனவர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோருடன் படகில் சென்று எண்ணெய்க் கசிவின் கோரங்களைப் பார்வையிட்டார். ஊடகவியலாளர்களைச் சந்தித்த நம்மவர், “சில வருடங்களுக்கு முன்பு இங்கே வந்தேன். இந்தப் பகுதியின் நிலைமை மேம்படும் என்று நினைத்தேன். ஆனால், மாசு அதிகமாகி சூழல் இன்னும் சீர்கேடு அடைந்துள்ளது. இந்த உயிர்க் கொல்லி கசிவுக்குக் காரணமானவர்களை அரசு தண்டித்தே ஆக வேண்டும். வெறும் பிளாஸ்டிக் பக்கெட்டை கையில் கொடுத்து நீங்களே அகற்றுங்கள் என அப்பாவி மீனவர்களைஇதில் ஈடுபட வைப்பது மனிதாபிமானமற்ற செயல். இந்த எண்ணெய்ப் படலத்தை அகற்றுவதில்அனுபவம் மிக்க நிபுணர்களும், இதற்குரிய தொழில்நுட்பக் கருவிகளும் உடனடியாக வரவழைக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.”என்றுதெரிவித்தார். 

#எண்ணூரில்_நம்மவர்
#EnnoreOilSpill 
#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1736312231296647204?s=1

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02WLDgsCw9yiuLMCkaY5M3Vk3k5oBqkEzS2ByNmUKCurehj49PtTHf4qWXG1teY4oHl&id=100064900236042&mibextid=Na33Lf

Instagram: https://www.instagram.com/p/C08tb6WPyAZ/?igshid=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post