நெல்லை மண்டல பொறியாளர் அணியும், கிள்ளியூர் மாவட்ட மக்கள் நீதி மய்யமும் இணைந்து நடத்திய சிறப்பு நிகழ்வுகள்.

29 ஆகஸ்ட், 2023

                `

நெல்லை மண்டல பொறியாளர் அணியும், கிள்ளியூர் மாவட்ட மக்கள் நீதி மய்யமும் இணைந்து 27.08.2023 அன்று நடத்திய சிறப்பு நிகழ்வுகளில்,

கட்சியின் துணைத் தலைவர் திரு. A. G. மௌரியா IPS (Rtd) அவர்கள் கட்சி #மய்யக்கொடி ஏற்றி வைத்தார். துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்கள் கிள்ளியூர் மக்கள் நீதி மய்யம் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார். 

பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் Dr. வைத்தீஸ்வரன் அவர்கள் 780 புத்தகங்களை கொண்ட நம்மவர் நூலகத்தை திறந்து வைத்தார்.

மாநில செயலாளர் திரு.சிவ இளங்கோ அவர்கள் இரவு நேர பாடசாலை திறந்து வைத்தார்.
நெல்லை மண்டல செயலாளர் Dr. D. பிரேம்நாத் அவர்கள் இரவு நேர பாடசாலை வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்க முன் வந்த ஆசிரியர்களை கௌரவ படுத்தினார்.

தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஜான்சன் தங்கவேல் அவர்கள் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களை கௌரவப்படுத்தினார்.

மேலும் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடு: பொறியாளர் அணி மண்டல அமைப்பாளர் திரு. A. ஜிம்மி பான்சன் மற்றும் கிள்ளியூர் மாவட்ட செயலாளர் திரு. பெறி எவான்சன்.

மேலும இந்நிகழ்வில் திரு. சண்முகராஜன் (மாநில துணைச் செயலாளர் தலைமை நிலையம்), திரு. மயில்வாகனன் (மாநில ஒருங்கிணைப்பாளர் தொழில் முனைவோர் அணி), திரு. பிரேம்குமார் பர்னா( நெல்லை மண்டல அமைப்பாளர் விவசாய அணி), திருமதி.செல்வி (நெல்லை மண்டல அமைப்பாளர் மகளிர் அணி), திரு.சரவணகுமார் (சென்னை மண்டல அமைப்பாளர் பொறியாளர் அணி), திரு.அரவிந்த் ( காஞ்சி மண்டல அமைப்பாளர் பொறியாளர் அணி ), திரு.சண்முகம் (காஞ்சி மண்டல அமைப்பாளர் விவசாய அணி), திரு.சசி (எ)ஜெயபிரகாஷ்(கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர்), திரு.ஜோசப் ஹெனி (குளச்சல் மநீம மாவட்ட செயலாளர்), திரு.மோகன் (விளவங்கோடு மநீம மாவட்ட செயலாளர்), திரு.சபின் ( பத்மநாதபுரம் மநீம மாவட்ட செயலாளர்), திரு.பிலிப் (பாளையங்கோட்டை மநீம மாவட்டச் செயலாளர்), திரு.அய்யா சாமி (சங்கரன்கோவில் மநீம மாவட்ட செயலாளர்), திரு.ஜெயக்குமார் (அம்பாசமுத்திரம் மநீம மாவட்ட செயலாளர்) அவர்களுடன் மாவட்ட அமைப்பாளர்கள், துணை மாவட்ட செயலாளர்கள்/அமைப்பாளர்கள், ஒன்றிய செயலர்கள்/அமைப்பாளர்கள், நகர செயலாளர்கள்/அமைப்பாளர்கள், வட்டச் செயலாளர்கள், ஆசிரியர்கள், மய்ய நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.




Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1696492734880575812?t=T6IFMnPmb1gl1Njb2axCUA&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02eQZQBnk4yhUuR6DghFwjDLkANQfNY9QgMhKsW3x9TZxgUEunpgxt67cdgXCAA7hol&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CwhxYcKJtxN/?igshid=MmU2YjMzNjRlOQ==

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post