தலைவர் நம்மவரை சந்தித்து, வாழ்த்து பெற்ற முனைவர் திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன்.

14 ஜூன், 2024

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களை, அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு வென்று, நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள முனைவர் திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள், நம்மவர் அலுவலகத்தில் இன்று (14.6.2024) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், தேர்தலின்போது தன்னை ஆதரித்துப் பரப்புரை செய்தமைக்காக கட்சித் தலைவர் நம்மவருக்கு நன்றியும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு.ஏ.ஜி.மௌரியா IPS (Rtd) அவர்களும், பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் M.A., B.L அவர்களும் உடனிருந்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#DMK

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1801537314306539989

Facebook: https://www.facebook.com/share/p/V5nRw2nT8N5BTa4P/

Instagram: https://www.instagram.com/p/C8MKKEmppzT/?utm_source=ig_web_copy_link

சமீபத்திய காணொளி







Share this post