நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள், நம்மவரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

7 ஜூன், 2024

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர் திரு.கமல் ஹாசன் அவர்களை, திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திரு. K.சுப்பராயன் அவர்கள் மற்றும் திரு.V.செல்வராஜ் அவர்கள் தலைவர் நம்மவரின் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர். அத்துடன் திருப்பூரில் பரப்புரை செய்தமைக்கு, நம்மவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்கள்.

அவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் திரு. மு.வீரபாண்டியன், திரு. க.மாரிமுத்து, திரு. மாசிலாமணி, திரு.காசி விஸ்வநாதன், திருமதி. வகிதா நிஜாம், திரு. லி.உதயகுமார், திரு.கேசவராஜ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் M.A., B.L. ஆகியோர் உடனிருந்தனர்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1799061837260173380

Facebook: https://www.facebook.com/share/p/DDMMrPpFTpiQpP6G/


சமீபத்திய காணொளி







Share this post