கோவையில் மக்கள் நீதி மய்யம் பயிற்சி பட்டறை அணி சார்பில் சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி!

24 மார்ச், 2025

கோவையில் மக்கள் நீதி மய்யம் பயிற்சி பட்டறை அணி சார்பில் சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன்அவர்களது வழிகாட்டுதலின்படி, பயிற்சி பட்டறை அணி கோவை மண்டல அமைப்பாளர் திரு. C.ஶ்ரீதர் அவர்களின் ஏற்பாட்டில், கோவை வடக்கு தொகுதியில் சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி சிறப்பாக நடைபெற்றது.

கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. தனவேந்திரன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், சமூக ஊடக அணி கோவை மண்டலச் அமைப்பாளர் திரு. தாஜுதீன், சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர்கள் திரு. பாலமணிகண்டன், திரு. ரவிசங்கர், திரு. தட்சிணாமூர்த்தி ஆகியோர் பயிற்சி பட்டறையில் பங்கேற்றவர்களுக்கு சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு பயிற்சிகளை வழங்கினர்.

இதில் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1904127527301550311

Facebook: https://www.facebook.com/share/p/15qXzbGKeQ/

Instagram: https://www.instagram.com/p/DHlGzVCpLVT/?utm_source=ig_web_copy_link

சமீபத்திய காணொளி







Share this post