கடலூர் ரயில் விபத்து: எவரின் அலட்சியமாக இருந்தாலும் இது மன்னிக்கத் தகுந்ததே அல்ல.

9 ஜூலை, 2025

 

இதயத்தைப் பதைக்க வைக்கும் செய்தி. கடலூர் செம்மங்குப்பம் ரயில் பாதையில் பள்ளிக்குச் சென்ற ஒன்றுமறியா இளங்குருத்துகள் ரயில் மோதி இறந்ததை ஒப்பவே மனம் மறுக்கிறது. எவரின் அலட்சியமாக இருந்தாலும் இது மன்னிக்கத் தகுந்ததே அல்ல.

ஏற்றுக்கொள்ளவே முடியாத துக்கம் நிகழ்ந்திருக்கிறது. இனியும் இதுபோன்ற அலட்சிய விபத்துகள் நிகழாமல் தவிர்த்திட அரசும், ரயில்வே துறையும், உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

உயிருக்கு உயிரான பிள்ளைகளைப் பறிகொடுத்து கலங்கி நிற்கும் பெற்றோர், உறவினர், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1942602116670902466

Facebook: https://www.facebook.com/share/p/1AZW6frK5H/

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post