காந்தியம் என்னும் கருத்தாக்கத்துக்கு உருவமாய் இன்று நம் கண்முன் நிற்கும் பெருந்தகையாளர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்.
சட்டரீதியான போராட்டங்களால், செயல்பாடுகளால் லட்சக்கணக்கான எளிய மக்களுக்கு வாழ்வாதாரம் பெற்றுத் தந்த காந்தியர்.
வாழ்வு, சேவை என்பவை இரு வேறு விஷயங்கள் என்றில்லாமல், வாழ்வே சேவை என்று வாழும் அம்மையார் கிருஷ்ணம்மாள் அவர்களின் வயதில் இன்று நூறாவது ஆண்டு தொடங்குகிறது. அவரை வணங்கி வாழ்த்துவது என் கடமை. ‘இன்னுமொரு நூற்றாண்டு இரும்’ என்னும் சம்பிரதாய வாழ்த்துச் சொல் இவருக்கே பொருந்தும். வாழ்க பல்லாண்டு.
Social Media Link
Twitter: https://x.com/ikamalhaasan/status/1934512612068483407