என்னுடைய அழைப்பை ஏற்று எனது இல்லத்துக்கு வருகை தந்து, என்னையும் என் மூத்த சகோதரர் சாருஹாசன் அவர்களையும் கௌரவப்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், அன்புக்குரிய நண்பர் திரு. @mkstalin மற்றும் திருமதி. துர்கா ஸ்டாலின் தம்பதியருக்கும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், என் அன்புக்குரிய இளவல் திரு. @Udhaystalin மற்றும் திருமதி. @astrokiru தம்பதியருக்கும், என் அன்புக்குரிய நண்பர் திரு. சபரீஸன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுவாக அப்பாவின் நண்பர்களோடு பிள்ளைகள் நெருக்கம் காட்ட மாட்டார்கள். மரியாதையுடனான சிறு விலகல் இருக்கும். ஆனால், முத்தமிழறிஞர் உடனான எனது உறவு மூன்று தலைமுறைத் தாண்டிய நெருக்கம் கொண்டது. நிபந்தனைகளற்ற தூய பேரன்பினால், அளவு கடந்த மரியாதையால் பிணைத்துக்கட்டப்பட்டது எங்கள் உறவு. அதை உறுதி செய்யும் வகையில் அமைந்தது இந்த சந்திப்பு.
நேற்றைய மாலை விருந்தில் மகிழ்ந்தோம், நெகிழ்ந்தோம்.
Social Media Link
X: https://x.com/ikamalhaasan/status/1987033365309014275?s=20