உயிர்களைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த பாராட்டு. - தலைவர் திரு. கமல் ஹாசன்.

29 நவம்பர், 2023

உத்தரகாசியில் சுரங்கத்தொழிலாளர்கள் நாற்பத்தொரு பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டது பெரிய ஆறுதலைத் தருகிறது. 

கடுமையான சவால்கள், பின்னடைவுகள் ஏற்பட்டபோதும் சளைக்காமல் தீரத்துடன் போராடி உயிர்களைக் காத்த மீட்புக் குழுவினரும், அவர்களுக்கு உதவிய எலி வளை சுரங்கத்தொழிலாளர்களும் போற்றுதலுக்குரியவர்கள். சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட தொழிலாளர்களும் மனத்திடத்தோடு காத்திருந்தது பாராட்டத் தக்கது. 

17 நாட்கள் தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் உயிர்களைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த பாராட்டு. மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோடு எனது மகிழ்வைப் பகிர்ந்துகொள்கிறேன். 
#UttarakhandTunnelRescueOperation

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1729786916651102588?t=MPVT4eOUUgEEE5JHkc7W2w&s=08

Facebook: https://www.facebook.com/share/UWChntocVvaycuM1/?mibextid=Na33Lf

சமீபத்திய காணொளி







Share this post