பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் நாடுகள் என்றும் தழைக்கும் என்பதில் ஐயமில்லை. -  தலைவர் திரு. கமல் ஹாசன்.

20 செப்டம்பர், 2023

இந்தியக் குடியரசு வரலாற்றில் பொன்னேட்டில் பதிக்கப்பட வேண்டிய நாள்!
என் மகிழ்ச்சி என்னவென்றால், புதிய இல்லத்தில் குடிபுகுந்திருக்கும் நம் ஜனநாயகம், அந்தப் புதிய வீட்டில் முதல் மசோதாவாகத் தாக்கல் செய்திருப்பது. பல ஆண்டுகளாக, நீதி மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மிகப்பெரிய சிறுபான்மையினரான நம் இந்தியப் பெண்களுக்கான மசோதா என்பதே.

இதனை நான் மணதாரப் பாராட்டுகிறேன். பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் நாடுகள் என்றும் தழைக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த மசோதா குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கும் போது, கீழ்கண்ட என் கவலைகளையும் குறிப்பிட, அனைத்துக் கட்சிகளையும் வேண்டுகிறேன்.

இந்த மசோதா, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணயம் ஆகியற்றிற்குப் பிறகே செயல்பாட்டிற்கு வரும். நமது கணக்கெடுப்பும் எல்லை நிர்ணயமும் பல ஆண்டுகளாகத் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இந்த உண்மை நிலை இந்த மாபெரும் மசோதாவை வெறும் வாய் வார்த்தையாக மாற்றக் கூடும்.

தற்போது இந்த மசோதா லோக் சபாவிற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் மட்டும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது. இது ராஜ்யசபாவிற்கும், மாநில, சட்டமன்றக் கவுன்சில்களுக்கும் நீட்டிக்கப் படவேண்டும்.

தனிப்பட்டப் பிரயத்தனங்கள் இல்லாமல், சட்டமியற்றும் இடத்தில சரிசமமாக நம் இந்திய மகளிர் இடம் பெரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

#WomenReservationBill

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1704329910825951446?s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0z4WSRqca7ub1kwPEe5BVJi2LkpykD8zsS7MbWQTgyv2wnxYxRH6deLqew2AtBqGjl&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Share this post