திருவள்ளூர் தொழிற்சாலை அமோனியா வாயுக் கசிவு: பாதுகாப்பு நடைமுறைகள், தீவிரமாகக் கண்காணிப்பும், கடுமையான நடவடிக்கையும்.

21 ஜூன், 2026

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதும், பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதும் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். 

உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய விழைகிறேன். 

உயிராபத்து விளைவிக்கும் ரசாயனங்களைக் கையாளும் தொழிற்சாலைகளில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சமரசமின்றிக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அலட்சியம் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/2068701001587274076?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1P2nY1iKwe/

சமீபத்திய காணொளி







Share this post