"வழக்கறிஞர் சங்கத்தின் பிதாமகர்" திரு. கேசவ பரசுராம் அவர்களின் வது பிறந்தநாள் அன்று நம்மவர் வாழ்த்து.

9 அக்டோபர், 2023
 
S

ஒரு பண்பாளரின் வாழ்க்கையை நான் கொண்டாட விரும்புகிறேன். பண்பும் அமைதியும் கொண்ட திரு. கேசவ பரசுராம், என் அத்திம்பேர் ,தன் வாழ்வில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியவர். சட்ட வல்லுநர், பாராளுமன்ற உறுப்பினர் , ஆன்மீக அறிவு கொண்டவர் , கலையையும் விளையாட்டையும் ரசிக்கக் கூடியவர். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நல்ல கணவர், அன்பான தந்தை .

நம் கலாச்சாரத்தையும் , அரசியலமைப்பையும் பெரிதும் மதித்தவர். நம் கொள்கைகளில் பிடிப்பு இருக்க வேண்டும் என்றும் ,நம் கருத்து வேறுபாடுகளைப் புன்னகையோடு கடக்க வேண்டும் என்றும் சொல்லித் தந்தவர். 

நேர்மையாளர். அதிகாரத்தைக் கண்டு அஞ்சாதவர். அவரது தீர்க்கம், அவருக்கு "வழக்கறிஞர் சங்கத்தின் பிதாமகர்" என்றப் பட்டதைப் பெற்றுத் தந்தது.
ஆனால் நீங்கள் என்றும் எனது அன்பு அத்திம்பேர்! நீங்கள் அன்பு, பாசம், அறிவாற்றல், எளிமை ஆகியவற்றின் வடிவமாகத் திகழ்ந்தீர்கள். தங்களது 97வது பிறந்தநாளில் இந்த தேசமே உங்கள் பொதுச் சேவையை அன்போடு நினைவு கூறுகிறது.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1711345511666680231?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02DqHKaGNp3VJqAgxawxcemgRRQZsL1CwAdEhs2myLfsK8CGUB956Q6JgdBfSoZyC5l&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Share this post