கரூரில் நிகழ்ந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களைஇன்று மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமானதிரு. கமல் ஹாசன் அவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்.
(06.10.2025)
இன்று (06.10.2025) மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள்,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் அவர்கள், செப்டம்பர் 27, 2025 அன்று, கரூரில் நடத்திய பரப்புரையின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் உயிரிழந்த இடங்களை ஆய்வு செய்ததுடன்,
உயிரிழந்தோரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து , இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது என்றும், மேற்படி உதவிகள் தேவைபடும் எனில் தமிழக அரசு நிச்சயம் அதனை செய்து முடிக்கும் என்றும், நானும் உதவி செய்ய இருப்பதாகவும், இது போன்ற சூழலில் மிகவும் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் ஆறுதல் கூறினார்.
மேலும் உயிரிழந்த 41 பேரில், 8 பேரின் குடும்பத்தினருக்கு உதவி தொகையாக ரூ.1 லட்சத்தை வழங்கினார்.
மீதமுள்ள 33 குடும்பத்தினருக்கு நாளை (07.10.2025) கட்சியின் துணைத் தலைவர் திரு. தங்கவேலு, மண்டலச் செயலாளர்கள் திரு. ரவிச்சந்திரன், திரு. ரங்கநாதன் மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் திரு. மோகன்ராஜ் ஆகியோர் இணைந்து உதவித் தொகை வழங்கவுள்ளனர்.
இன்றைய நிகழ்வில் தலைவர் அவர்களுடன் முன்னாள் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G.மௌரியா IPS (Retd) அவர்களும், திரு. தங்கவேலு அவர்களும், பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்களும் மற்றும் மாநில, மண்டல, மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள்.
6 அக்டோபர், 2025
in அறிக்கைகள்