மக்கள் நீதி மய்யம் கட்சியின் பரப்புரையாளர்கள் கூட்டம்.

20 மார்ச், 2024

வணக்கம்,

வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நமது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை வலுப்படுத்தும் விதமாக கட்சியின் பரப்புரையாளர்கள் கூட்டம் இன்று (20.03.2024) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் தலைமைதாங்கி பிரச்சாரம் எப்படியிருக்க வேண்டும் என்று விளக்கினார்.

கூட்டத்தில், புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் திரு. சந்திரமோகன், மாநிலச் செயலாளர்கள் திரு. காந்தி கண்ணதாசன், திரு.முரளி அப்பாஸ், திரு. செந்தில் ஆறுமுகம், திரு.ராகேஷ் ராஜசேகரன் மற்றும் தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.மயில்வாகனன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். 

நிகழ்வில் கட்சியின் அனைத்து பரப்புரையாளர்களும் கலந்து கொண்டனர்.

- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF



சமீபத்திய காணொளி







Share this post