சிந்துவெளிப் பண்பாட்டு ஆய்வறிஞரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியுமான நண்பர் திரு. ஆர். பாலகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் இன்று.
ஓர் எளிய பின்னணியில் பிறந்து தமிழ்வழியில் ஐஏஎஸ் தேர்வெழுதி வென்று காட்டியவர். தான் வகித்த பதவிகளில் எல்லாம் சிறந்து துலங்கி தமிழ் முத்திரையை ஆழப் பதித்தவர். ஆய்வுப் பணிகள், பதிப்புப் பணிகள், தமிழ் வளர்ச்சிப் பணிகள் என ஓயாது உழைக்கும் இவர் ‘ஓய்வென்பது ஓய்ந்திருப்பதல்ல’ என்னும் சொற்றொடரின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
இன்றைய இளையோர் இவரெழுதிய நூல்களை வாசிப்பதும், இவரது வாழ்விலிருந்து உத்வேகம் பெற்றுக்கொள்வதும் அவசியம் எனக் கருதுகிறேன்.
தமிழ்ப் பண்பாட்டின் அறியப்படாத பகுதிகளை ஆராய்ந்து வெளிப்படுத்தும் பெரும்பணியில் ஆழ்ந்திருக்கும் அன்பிற்கினிய நண்பரின் பிறந்தநாளில் அவருக்கென் வாழ்த்து.
Social Media Link
X: https://x.com/ikamalhaasan/status/1994352223665688667?s=20