இலங்கை கடற்படையினரால் 16 பேர் கைது!ஆதரவின்றித் தவிக்கும் தமிழக மீனவர்களின் கண்ணீரை துடைக்க மத்திய அரசு முன்வருமா?

13 மார்ச், 2023

இலங்கை கடற்படையினரால் 16 பேர் கைது!
ஆதரவின்றித் தவிக்கும் தமிழக மீனவர்களின் கண்ணீரை துடைக்க மத்திய அரசு முன்வருமா?
துணைத் தலைவர் திரு. R. தங்கவேலு அறிக்கை
 


நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற அக்கரைப்பேட்டை மீனவர்கள் 12 பேரை கோடியக்கரை அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இரு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவர்களை கைது செய்வதும், வாழ்வாதாரமான படகுகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகிவிட்டது. இலங்கையின் அட்டகாசத்தை தடுக்கக் கோரி பலமுறை வலியுறுத்தியும், மத்திய அரசு தமிழக மீனவர் நலனில் சிறிதும் அக்கறை காட்டுவதில்லை.

கண்ணீரைத் துடைக்கவும், ஆதரவு காட்டவும் ஆளில்லாமல், மீனவர்களின் கண்ணீர் கடலில் கரைந்து கொண்டிருக்கிறது. கைதான மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க உடனடி நடவடிக்கை அவசியம். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என மத்திய அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

- R. தங்கவேலு,
துணைத் தலைவர்,
மக்கள் நீதி மய்யம்



சமீபத்திய காணொளி







Share this post