கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பட்டியலின சமூகத்தினர் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல்!

8 மார்ச், 2023

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பட்டியலின சமூகத்தினர் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல்! 

மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் 

மாநில செயலாளர் திருமதி. சினேகா மோகன்தாஸ் அறிக்கை

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகேயுள்ள சாத்தப்பாடியில், பட்டியலின சமூகத்தினரை ஆதிக்க சாதியினர் தாக்கிய செய்தி வேதனையை அளிக்கிறது. அதுவும், சாமி சிலை ஊர்வலத்தின்போது ஒலிபெருக்கியில் குறிப்பிட்ட திரைப்படப் பாடலை ஒலிபரப்பியதற்காக தாக்கியது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  

மேலும், காயமடைந்தவர்கள் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தையும் தடுத்து நிறுத்தி, அதிலிருந்தவர்களைத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்களை காவல் துறையினர் உடனடியாக கைது செய்து, சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

திரைப்படப் பாடலைக்கூடப் பொறுத்துக்கொள்ள முடியாமல், பட்டியலின மக்களைத் தாக்கியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. சாதி ரீதியிலான தாக்குதல்கள் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சாதி வெறி, ஆதிக்க மனப்பான்மையை வேரோடு அகற்றும் பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே உண்டு.

-சினேகா மோகன்தாஸ்
மாநில செயலாளர்
மக்கள் நீதி மய்யம்

 


சமீபத்திய காணொளி







Share this post