தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்தநாள் விழா!

5 நவம்பர், 2023

தலைவர் நம்மவர் பிறந்தநாள் விழா அழைப்பு!

அனைவருக்கும் வணக்கம்,

நமது தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்தநாள் விழாவை சிறப்புடன் கொண்டாட நமது கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் விரும்பிய வண்ணம், தலைவரின் பிறந்தநாளான 
07-11-2023 அன்று, மாலை 3 மணிக்கு சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K.Convention Centre அரங்கில் தொண்டர்களும், நற்பணி நம்மவர்களும் சூழ, வெகுசிறப்புடன் கொண்டாடப்பட இருக்கிறது.

ஆழ்ந்த அறிவும், எல்லையில்லா ஆற்றலும், பலகோடி மக்களை ஈர்க்கும் வல்லமையும், தேர்ந்த ஆளுமையும் கொண்ட நமது தலைவரின் பிறந்தநாளை கொண்டாடவும், நாடாளுமன்றத் தேர்தலை எழுச்சியோடு எதிர்கொள்ளவும் நவம்பர் 7 (செவ்வாய்க்கிழமை) அன்று நாம் அனைவரும் ஒன்றுகூடுவோம்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், நற்பணி நம்மவர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் மற்றும் ம.நீ.ம உறுப்பினர்கள் அனைவரையும் தலைவர் நம்மவரின் பிறந்தநாளினை சிறப்பாக கொண்டாடிட வரவேற்கிறோம்.

நாளை நமதே!

Location : R.K.Convention Centre,
4/111, East coast raod,
Neelangarai, Chennai – 115.
Location: https://g.co/kgs/fRTV3u


Download PDF

Social Media Link: 

Twitter: https://twitter.com/maiamofficial/status/1721121418677821599?t=yQW5MshYk2huNV0BtHYQwA&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02YnH6xwfQcZGKw7WnnFCUAUkjEP4FFEURihvajoJyKNVhhkKfg7pM98L8grLPMFJLl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CzQxRymJvJD/?igshid=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post