இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

19 மார்ச், 2024
 
S

வணக்கம்,

'இண்டியா' கூட்டணியில் இடம் பெற்றிருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூட்டணியில் ஒதுக்கப்பட்ட திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் திரு. சுப்பராயன் அவர்கள், திரு. செல்வராஜ் அவர்கள் இருவரும் இன்று (19.03.2024) மாலை 4 மணியளவில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

தலைவர். நம்மவர் அவர்கள் இருவரையும் வரவேற்று, சிறப்பான வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். 

கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களோடு, மாநில நிர்வாகிகள் திரு.மு.வீரபாண்டியன், திரு.ரவி, திரு.லி.உதயகுமார், திரு.மாரிமுத்து, திரு. மாசிலாமணி, திரு.க.பாரதி ஆகியோர் தலைவர் நம்மவரை சந்தித்தனர்.

நிகழ்வின் போது மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் அவர்கள் உடனிருந்தார்.

ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


சமீபத்திய காணொளி







Share this post