தலைவர் நம்மவரை சந்தித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளர்.

8 மே, 2024

                `

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளர் - நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மாண்புமிகு K.N.நேரு அவர்களும், திமுக துணைப் பொதுச்செயலாளர் - பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.ராசா அவர்களும், இன்று காலை தலைவர் அலுவலகத்தில் சந்தித்தனர். 

தலைவரின் மாமா அமரர் னிவாசன் அவர்களின் மறைவுக்கு ஆறுதல் கூறினர். அத்துடன், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், தலைவர் நம்மவர் அவர்கள் தமிழ்நாடு முழுக்கப் பயணம் மேற்கொண்டு திமுக தலைமையிலான கூட்டணிக்குப் பரப்புரை செய்தமைக்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டனர்.

இவர்களோடு, திரு. K.N.நேருவின் சகோதரரும் உடனிருந்தார்.

- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


சமீபத்திய காணொளிYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post