நம்மவரை சந்தித்த, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர் முனைவர். தமிழச்சி தங்கபாண்டியன்.

14 ஜூன், 2024
 
S

வணக்கம் 

இன்று (14.06.2024) காலை 11 மணியளவில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, அண்மையில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தென்சென்னை தொகுதியின் போட்டியிட்டு வெற்றிபெற்ற முனைவர். திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள், தலைவர் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 

அத்துடன், தேர்தல் நேரத்தில் நம்மவர் பரப்புரை செய்தமைக்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டார்.
நிகழ்வில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா IPS (Rtd) அவர்களும், பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் M.A., B.L அவர்களும் உடனிருந்தனர்.

- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


சமீபத்திய காணொளி







Share this post