மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாட்டளி மக்கள் கட்சியின் நிறுவனர் திரு. ராமதாஸ் அவர்களையும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக கழகத்தின் தலைவர் திரு. வைகோ அவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார், தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.

7 அக்டோபர், 2025

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் திரு. ராமதாஸ் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே மருத்துவமனையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. வைகோ அவர்களும் சிகிச்சை பெற்று வருகிறார். 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் இன்று திரு. ராமதாஸ் அவர்களை நேரில் சந்தித்து சந்தித்து அவர்களது உடல்நலம் குறித்து விசாரித்தார். 

திரு. வைகோ அவர்களின் புதல்வரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. துரை வைகோ அவர்களிடம் திரு. வைகோ அவர்களது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். 

இருவரும் விரைவில் பூரண நலம் பெற்று வழக்கமான பணிகளில் ஈடுபட வேண்டும் என்று திரு. கமல் ஹாசன் வாழ்த்தினார். 

இந்தச் சந்திப்பின்போது பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவத் தலைவரும், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான 
திரு. ஜி.கே. மணி அவர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் ஆகியோர் உடனிருந்தனர்.

-ஊடகப் பிரிவு, 
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


சமீபத்திய காணொளி







Share this post