தொடரும் காவல் மரணங்கள்! மக்கள் நீதி மய்யம் கண்டனம்.

23 ஜூலை, 2026
 
S

தொடரும் காவல் மரணங்கள்! மக்கள் நீதி மய்யம் கண்டனம்.

தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் மரணமடைந்திருக்கிறார். 

இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. 

காவல் விசாரணை மரணங்கள் என்பது சாத்தான்குளம் தொடங்கி, சிவகங்கை மற்றும் அண்மையில் நாகர்கோயில், இப்போது தூத்துக்குடி என்று தொடரும் நிகழ்வாகிவிட்டது.

இப்படி தொடர்ந்து நடந்தும், நீதிமன்றம் பலதடவை கண்டித்தும், காவல்துறையானது இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

காவல் விசாரணை மரணங்களில் தமிழ்நாடு அரசின், தொடர் அலட்சியப் போக்கை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், நேர்மையான - துரிதமான விசாரணை நடத்தப்பட்டு குற்றச்செயலில் ஈடுபட்ட அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.‌

- R.தங்கவேலு @Thangavelukovai ,
துணைத் தலைவர்,
மக்கள் நீதி மய்யம்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#LockUpDeath

Download PDF


சமீபத்திய காணொளி







Share this post