தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் திரு. எல்.கே. சுதீஷ் ஆகியோரின் தாயார் காலமான செய்தியறிந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் புதுடெல்லியில் இருந்து திருமதி. பிரேமலதா விஜயகாந்த் மற்றும் திரு. எல். கே. சுதிஷ் இருவரையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம், மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. முரளி அப்பாஸ், திரு. ராகேஷ் ராஜசேகரன், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன், மாவட்டச் செயலாளர்கள் திரு. பாசில், திரு. கதிர், திரு. சண்முகசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
-ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
தேமுதிக பிரேமலதாவின் தாயார் மறைவிற்கு தலைவர் மநீம கட்சியின் சார்பில் நேரில் இரங்கல்.
8 அக்டோபர், 2025
in அறிக்கைகள்