மணிப்பூர் மாநில அரசை கலைக்கக்கோரும் மக்கள் நீதி மய்யம்.

25 ஜூலை, 2023

கடந்த மூன்று மாதங்களாக கலவரபூமியாகயிருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் உண்மை நிலையறிய தலைவர் நம்மவர் அவர்கள் அந்த மாநிலத்திற்கு செல்வதற்கு ஆயத்தமானார்.

அதன்பொருட்டு பயண ஏற்பாடுகளை செய்யவும், அதற்கான சூழ்நிலையை அறியவும் நம்மவர் அவர்கள் தனது பிரதிநிதியாக, கட்சிப்பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்களை அனுப்பிவைத்தார்.

இதற்கிடையில் அம்மாநில அரசு தலைவர் பயணம் செய்வது பாதுக்காப்பானதாகயிருக்காது என்று கூறி அனுமதிக்க மறுத்துவிட்டது.

தொடர்ந்து தலைவர் நம்மவர் அவர்கள், மணிப்பூர் மாநில அரசை கலைத்து விட்டு அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டுவர வேண்டுமென ட்வீட் செய்தார்.

இன்று, தலைவரின் அந்தக்கருத்தை வலியுறுத்தும் விதமாக, அங்குள்ள நிலையையும், தலைவரின் பிரதிநிதி பொதுச்செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் அந்த மக்களை பார்த்து வந்த காட்சிகளையும் மக்கள் நீதி மய்யம் கட்சி வீடியோ வெளியிடுகிறது.

மக்கள் நீதி மய்யம் மற்றும் தலைவர் நம்மவர் அவர்களின் கோரிக்கையை ஏற்று, அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி கொண்டுவந்து மீண்டும் அமைதி திரும்ப வழிவகுக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

- முரளி அப்பாஸ் 
ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Murali Appas,
state secretary, Makkal Needhi Maiam.


Download PDF


Social Media Link 

Twitter: https://twitter.com/maiamofficial/status/1683789394321510400?s=20

Facebook: https://fb.watch/l-o5X0Chs4/?mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/reel/CvHgfVTg2nM/?igshid=MzRlODBiNWFlZA==

Youtube: 

சமீபத்திய காணொளி







Share this post