நம்மவர் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்களவை குழு தலைவர் திரு. டி.ஆர்.பாலு அவர்கள் சந்திப்பு.

19 ஜூன், 2024

வணக்கம் 

இன்று (18.06.2024) காலை 11:00 மணியளவில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்களவைக் குழுத்தலைவர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள், தலைவரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

தனக்காக ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் நம்மவர் பரப்புரை செய்தமைக்கு நன்றியறிதலையும் தெரிவித்துக் கொண்டார்.

திரு. டி.ஆர்.பாலு அவர்களுடன் திராவிட முன்னேற்றக்கழக தலைமை நிலையச் செயலாளர் திரு. பூச்சி S.முருகன் அவர்கள் வருகை தந்தார்.

நிகழ்வில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா IPS (Rtd) அவர்களும் கலந்து கொண்டார்.

- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF 


சமீபத்திய காணொளி







Share this post