பத்திரிக்கை செய்தி
25/07/2025
மாநிலங்களவையின் உறுப்பினராகப் பதவியேற்ற நம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சி தமிழர் திரு. தொல்.திருமாவளவன் அவர்களும், பொதுச் செயலாளர் திரு.ரவிக்குமார் அவர்களும், மாநிலங்களவைத் துணைத் தலைவர் அறையில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மாநிலங்களவைத் துணைத் தலைவர் திரு. ஹரிவன்ஷ் நாராயணன் சிங் அவர்கள் உடனிருந்தார்.
அத்துடன் திராவிட முன்னேற்றக் கழக மாநிலங்களவை உறுப்பினர்களின் குழுத்தலைவர் திரு. திருச்சி N.சிவா அவர்களும் உடனிருந்தார்.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
மக்களவை உறுப்பினர்களுடன், தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.
25 ஜூலை, 2025
in அறிக்கைகள்