தனித்துவம் மிக்க இயக்குனர் கே.ஜி. ஜார்ஜ் அவர்களுக்கு எனது அஞ்சலி. - தலைவர் திரு. கமல் ஹாசன்.

25 செப்டம்பர், 2023

​மலையாளத் திரையுலகின் புதிய அலை இயக்குனர்களுள் ஒருவரான கே.ஜி. ஜார்ஜ் மறைந்தார். இரகள், ஸ்வப்னாடனம், மற்றொராள், ஊழ்க்கடல், மேளா, யவனிகா உள்ளிட்ட பல முக்கியமான திரைப்படங்களைத் தந்தவர். மலையாள சினிமா தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட்டமைப்பினை உருவாக்கி அதன் தலைவராகவும் பங்களிப்பாற்றினார்.

கே.ஜி. ஜார்ஜ் பெற்ற தேசிய விருதுகளும், மாநில விருதுகளும் அவரது திறமைக்குச் சான்று. இலக்கியத்திற்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்த உயரிய விருதான முட்டத்துவர்க்கி விருது, ‘இரகள் திரைக்கதையும் ஓர் இலக்கிய வகைமையே’ எனும் குறிப்புடன் அவருக்கு வழங்கப்பட்டது.

தனித்துவம் மிக்க இயக்குனருக்கு எனது அஞ்சலி.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1706233065511833914?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid08uFj5hkWoXyvTMmt77Ze252Wc9TXJihFH83GRhQkbh5KsPWEqyEq6TuezASoxhAal&id=100044460698474&mibextid=Nif5oz


சமீபத்திய காணொளி







Share this post